Idhayam Matrimony

இந்து மகாசபாவின் பிரிவினை அரசியலை நேதாஜி எதிர்த்தார் - மம்தா பானர்ஜி சொல்கிறார்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்தார் என்றும் மதச்சார்பற்ற இந்திய ஒற்றுமைக்காக அவர் பாடுபட்டார் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேதாஜி பிறந்த தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய மம்தா, நேதாஜி பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை நேதாஜி வலியுறுத்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்துவது இந்திய ஒற்றுமைக்காக போராடுவதைக் குறிக்கும் என்று தெரிவித்தார்.

நேதாஜி இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தார். அவர் மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராடினார், மேலும் அவரது மறைவு குறித்த புதிரை விடுவிக்க மத்திய அரசு துரிதமாக செயல்படவில்லை. சில கோப்புகளை மட்டும் வெளியிட்டனர். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 70 ஆண்டுகள் சென்ற பிறகும் அவருக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடானது என்றும் மம்தா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து