நியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள்: கோலி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      விளையாட்டு
kohli 2020 01 23

மும்பை : நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடும்போது உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வராது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் இந்தியா - நியூசிலாந்து அணிகள் தற்போது விளையாட இருக்கின்றன. அந்த தோல்விக்கு தற்போது பழிக்குப்பழி வாங்குவீர்களா? என்ற விராட் கோலியிடம் கேட்கபட்டது.

அதற்கு பதில் அளித்த விராட் கோலி, நீங்கள் அவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று விரும்பினால் கூட, நியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு அந்த எண்ணம் வராது. அவர்களுடன் நாங்கள் சிறந்த முறையில் மைதானத்தில் போட்டியிடுகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர்கள் விளங்கினர் என்பதை இங்கிலாந்து உலக கோப்பை தொடரின்போதே கூறியிருந்தேன். ஒவ்வொரு பந்திற்கும், ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத எந்த சைகையையும் அவர்கள் மைதானத்தில் செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து