எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : டெல்லியில் நேற்று பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ முன்னிலையில் இரு நாடுகள் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக, பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ 4 நாள் பயணமாக தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார். இதையடுத்து, டெல்லியில் பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையே இணையதள பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை நல்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முன்னதாக டெல்லி வந்த பிரேசில் அதிபருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சுவாா்த்தை நடத்துகிறார். பொல்சொனாராவுடன் 8 அமைச்சா்கள், 4 எம்.பி.க்கள், அரசின் மூத்த அதிகாரிகள், தொழிலதிபா்கள் குழுவினா் ஆகியோரும் வந்துள்ளனா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


