Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் மறக்கப்படாது - பிரதமர் மோடி அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புல்வாமா தாக்குதல் நடைபெற்றதன் முதலாமாண்டு நினைவு தினமான நேற்று  அந்த சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 

வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். ‘கடந்த ஆண்டு புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கான நபர்கள். இந்தியா அவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்காது’ என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து