முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் முதல்வர் எடப்பாடியை ஆரவாரத்துடன் வரவேற்ற அ.தி.முக. எம்.எல்.ஏ.க்கள்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : 3 ஆண்டு நிறைவு செய்து 4–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். அந்த வரவேற்பை கைக்கூப்பி மகிழ்ச்சியுடன் முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

2016 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. அப்போது முதல்வராக  ஜெயலலிதா இருந்தார். அவரது மறைவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். அவரது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழர் உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு கூட காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்தார். அதேபோல் அவரது ஆட்சியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் உருவெடுத்தது. அதேபோல் தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று அவற்றை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது. அது தொடர்ந்து நேற்று காலை பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9.55 மணிக்கு சட்டசபைக்குள் நுழைந்தார். அவர் பதவி ஏற்று 3 ஆண்டு நிறைவடைந்து 4-ம் ஆண்டு துவங்குவதையொட்டி அவருக்கு சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேஜையை தட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். அந்த வரவேற்பை புன்னகையோடு அவர் கைகூப்பி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்.அதை தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது பதில் அளித்து பேசிய அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முதல்வரின் சாதனைகளை எடுத்து கூறி அதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து