எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லியில் வன்முறை தொடர்பாக காந்தியடிகள் மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சி.ஏ.ஏ.) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக் காவலர் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 60 - க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த கலவரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில்:-
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சி.ஏ.ஏ.) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஏட்டு ரத்தன் லால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் நடந்த வன்முறை கண்டனத்திற்குரியது. காந்தியடிகள் மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை. தங்கள் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை நாட்டின் மீது திணிக்க விரும்பும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை. டெல்லியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


