எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர இந்திய பிரதமர் மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்றும் பாகிஸ்தானில் முழு அடைப்பு சாத்தியமில்லை என்றும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மொத்தம் 887 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். சிந்து மாகாணத்தில் மட்டும் 344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் தான். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது:-
நிலைமை இத்தாலியைப் போல மோசமாக இல்லை. பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுக்கு சாத்தியமில்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போன்றோர் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம். ஆனால் அதே சமயம் என்னால் முடியாது. அவ்வாறு அறிவித்தால் எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடும். எங்களது நாட்டிலும் கொரோனாவின் மரணப்பிடியில் மக்கள் அல்லல்படுகிறார்கள். பாகிஸ்தான் உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. பாகிஸ்தானில் 25 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருவதால் பாகிஸ்தானில் முழு அடைப்பு சாத்தியமில்லை. நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகின்றனர். முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும். மக்களின் துன்பத்தை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா வைரஸை விட அதனால் எற்படும் பீதிதான் பிரச்சினை மிகவும் ஆபத்தானது. அனைவரும் பீதி அடைந்தால் அது சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.மேலும் சமூகத்தில் இருந்து விலகுதல், சுயமாக தனித்திருத்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்படுத்துதல் முறைகளை வரவேற்பதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


