எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தாலும்கூட, இந்தியாவில் அதன் பரவல் ஜப்பானைப்போல் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்றும், இந்திய மருந்துகள் துறை தொடர்ந்து மருந்து வினியோகத்தை கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக பிரச்சினைகள் எழுகிறபோது பல்வேறு துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் துணையோடு தீர்வுகளையும் காண்கிறது எனவும் தெரிவித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதில் இருந்து மருந்துகள் உற்பத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. தவிரவும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையமும் போதுமான அளவுக்கு மருந்துகளை தயாரித்து இருப்பு வைக்குமாறும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்தி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


