Idhayam Matrimony

கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரம்: ரஷ்யா, சவுதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும்: டிரம்ப்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தகுந்த நேரத்தில் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவே இதனை சரி செய்யும் விதமாக, சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் உற்பத்தியை குறைப்பதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் ஒபெக் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்தது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தகுந்த நேரத்தில் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், அவர்கள் ஒன்று சேரப்போகிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைய போகிறோம். மக்களின் நன்மைக்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க போகிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து