முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்தது சர்வதேச கமிட்டி

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. 

ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப புதிய காலக்கெடுவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி வரை தகுச்சுற்றுகள் நடத்தி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு தகுதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து