Idhayam Matrimony

பிரதமர் நிவாரண நிதிக்கு மேலும் ரூ.75 லட்சம் வழங்கிய ஆக்கி இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் நிவாரண நிதிக்கு மேலும் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது அறிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் நாடு பொருளாதார ரீதியாகவும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்பாராத இந்த இன்னலை தாங்க எல்லா தரப்பினரும் அரசுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை கடந்த 1-ந் தேதி ஆக்கி இந்தியா அமைப்பு வழங்கி இருந்தது.

இந்த நிலையில் மேலும் ரூ.75 லட்சம் (மொத்தம் ரூ.1 கோடி) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது அறிவித்தார். செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதேபோல் இந்திய கோல்ப் வீரர் அனிர்பன் லஹிரி ரூ.7 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து