எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால், இன்னும் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. 10-ம் பொதுத் தேர்வு ஏப்ரல் 15-ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மே 15-ம் தேதி ஊரடங்கை நீட்டிக்க மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. ஆதலால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.
இந் நிலையில் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை வைகோ ரத்துசெய்யக் கோரியது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க 11 ஆயிரத்து 771 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


