Idhayam Matrimony

மருந்துகள் அனுப்பிய இந்திய பிரதமருக்கு மக்கள் சார்பில் பிரேசில் அதிபர் நன்றி

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைக் தயாரிக்க மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்த பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ நன்றி தெரிவித்துள்ளார்.

மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது. ஆனால் அமெரிக்கா இலங்கை, நேபாளம், வங்கதேசம், பிரேசில் போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, தடைகளை நீக்கியது.

இதையடுத்து பிரேசில் நாட்டு மக்களுக்கு நேற்று அந்நாட்டு அதிபர் ஜேர் போல்சோனாரோ உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நமக்குப் பல நல்ல செய்திகள் வருகின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகப் பேச்சு நடத்தினேன். இதன் விளைவாக நமக்கு வரும் சனிக்கிழமை, இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. இதன் மூலம் ஹைட்ரக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைத் தயாரித்து கொரோனா வைரஸ் நோயாளிகள், மலேரியா, ஆர்த்திடிஸ் போன்ற நோய்களுக்கு நிவாரணம் பெற முடியும்.இந்தக் கடினமான நேரத்தில் நமக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் பிரேசில் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து