Idhayam Matrimony

அடுத்த ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய வீரர் தான் பொருத்தமானவர் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கிரேம் சுமித் கருத்து

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன் : ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு இந்திய வீரர் தான் பொருத்தமானவராக இருப்பார் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேம் சுமித் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் ஷசாங் மனோகர் இருக்கிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார், அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரரும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான கிரேம் சுமித் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுமித் கூறுகையில், 

கொரோனா தாக்கம் தணிந்த பிறகு ஐ.சி.சி.யை வழிநடத்த வலுவான தலைமை தேவை. தலைமை பண்புடன் நவீன கால கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒருவர் பொறுப்பு ஏற்க இதுவே சரியான தருணம் ஆகும். அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கச்சிதமான தேர்வாக இருப்பார். ஐ.சி.சி.யின் தலைவர் பதவி மிகவும் முக்கியமான பதவி. கிரிக்கெட்டில் நன்கு அனுபவம் உள்ள கங்குலி போன்றவர் தலைவராக இருந்தால் அது கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லது. அவர் தொடர்ந்து கிரிக்கெட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து