Idhayam Matrimony

ஆம்பன் புயல்; மே.வங்கத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கடந்த 20-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. 

இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இந்த புயலுக்கு 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.  இதனை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என கூறினார்.  இந்நிலையில், ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது என மம்தா பானர்ஜி நேற்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து