எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெனீவா : கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது இடம்பிடித்து விட்டது.
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. கொரோனா முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும்16 லட்சத்து 86 ஆயிரத்து 436 பேருக்கு இதுவரை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து 4,51,702- பேர் மீண்டுள்ளனர். அதேபோல், பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளும் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சராசரியாக 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.38 லட்சமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021-ஆக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


