முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயலாக்க உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப்  தவறான தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்ததை டுவிட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், தங்கள் குரல்களை சமூக ஊடகங்கள் முடக்கப் பார்ப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் பதியப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வை செய்யும் விதத்திற்காக அவற்றின் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு இது வழிவகை செய்கிறது.

அதே சமயம் இந்த செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஊடக இணையத்தளங்களுக்கான பாதுகாப்புகள் குறித்த தற்போதைய சட்டரீதியிலான புரிதலை மாற்றும் பணியில் அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது நீதி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து