Idhayam Matrimony

லடாக் எல்லை பிரச்சினையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை: சீனா திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் 3-ம் நாட்டின் மத்தியஸ்தம் ஏதும் தேவையில்லை என சீனா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் புகார் கூறப்படுகிறது. அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். பதட்டமான சூழலில் சீன அதிபர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இந்திய எல்லையில் ஒட்டுமொத்த நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது. 

இதைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை என சீனா மற்றும் இந்தியா இருநாடுகளும் ஏற்கெனவே தெரிவித்து இருந்தன. இந்த நிலையி்ல் இந்த விவகாரம் தொடர்பாக சீனா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது. 3-ம் நாட்டின் மத்தியஸ்தம் ஏதும் தேவையில்லை என சீனா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இருநாடுகள் தொடர்புடைய பிரச்சினையில் 3-ம் நாட்டின் தலையீடு எந்தவிதத்திலும் தேவையில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து