முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை ஊழியருக்கு கொரோனா: பார்லி. இணைப்பு கட்டிடங்களுக்கு சீல்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையின் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், பாராளுமன்றத்தின் இரு இணைப்பு கட்டிடங்களும் கிருமிநாசினி தெளிப்புக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

பாராளுமன்றத்தில் பணிபுரிவோரில் 4-வது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் 3 ஊழியர்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 2-வது கட்ட ஊரடங்கு முடிந்து மீண்டும் மே 3-ம் தேதி முதல் ஊழியர்கள் பாராளுமன்றத்துக்கு பணிக்கு வந்தனர். அப்போது 3 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட ஊழியர் மாநிலங்களவையின் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு கொரோனா இருந்ததால், அவர்களுடன் இவரும் தொடர்பில் இருந்ததால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். பாராளுமன்றத்தில் அதிகாரி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்படுவது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன் மக்களவையில் மொழிமாற்றம் செய்யும் பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் முதல்முறையாக, அங்கு பணிபுரியும் துப்புறவு தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பட்ெஜட் கூட்டத்தொடர் முடிந்தபின், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது,

அதன்பின் பாதுகாவலர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாநிலங்களவை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருப்பதால், இரு இணைப்பு கட்டிங்களிலும் கிருமி நாசினி தெளி்ப்புக்காக மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கிரிஷி பவன், சாஸ்திரி பவன், நிதிஆயோக் ஆகிய கட்டிடங்கள் கிருமநாசினி தெளி்ப்புக்காக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து