முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்களுக்கு ஊதியம் தர ரூ.5 ஆயிரம் கோடி தாருங்கள் : மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் செலவுகளை சமாளிக்கவும் உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு கோரி்க்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து நாடுமுழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு 5-ம் கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிகப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியஅரசுக்கு டுவிட்டரில் விடுத்த கோரிக்கையில் பேரிடாரன இந்த நேரத்தில் டெல்லி மக்களுக்கு நிதியுதவி தந்து மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் காணொலி வாயிலாக நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி டெல்லியின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்காகவும், அலுவலகச் செலவுக்காகவும் உடனடியாக ரூ. 3500 கோடி தேவைப்படுகிறது.

கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் டெல்லியில் வரி வசூல் 85 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் மத்திய அரசு உடனடியாக டெல்லி அரசுக்கு ரூ. 5000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பேரிடர் நிவாரண நிதியில் டெல்லி அரசு இதுவரை ஏதும் பெறவில்லை.

மற்ற மாநிலங்களுக்கு கிடைத்தன, ஆனால் டெல்லிக்கு இல்லாததால் பெரும் நிதிநெருக்கடியில் இருக்கிறது. இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் தருவது என்பதுதான் ஆதலால், உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டுள்ளோம். கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க குறைந்தபட்சம் ரூ 7 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் வரி வருவாயாக ரூ.1,775 கோடி வந்துள்ளது எனத் தெரிவி்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து