எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லியில் தொடர்ந்து கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதையடுத்து, மாநிலத்தின் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.
கொரோனா வைரஸால் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. 4-வது கட்ட லாக்டவுன் தொடங்கியபோது ஏராளமான தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்தபின் மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, டெல்லியில் 19 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,478 பேர் குணமடைந்துள்ளனர். ஏறக்குறைய 11 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 473 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதையடுத்து, டெல்லியிலிருந்து வரும் மக்களால் மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிக்கிறது. இதனால் உத்தரப் பிரதேசத்துக்கு உட்பட்ட கவுதம்-புத்தநகர் மாவட்ட நிர்வாகம், நொய்டா-டெல்லி நெடுஞ்சாலையை நேற்று மூடி சீல் வைத்தது.
இந்தச் சூழலில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ''டெல்லியில் கொரோனா நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஹரியாணா, உத்தரப் பிரதேசம் டெல்லி எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு மூடி சீல் வைக்கப்படுகிறது. இந்த எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.
அத்தியாவசிய சேவை தேவைப்படுவோர் டெல்லி அரசிடம் முறையான அனுமதிச் சீட்டு பெற்று உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம்.
ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் எல்லைகளை அடுத்த ஒரு வாரத்துக்குப் பின் திறப்பது குறித்து டெல்லி மக்கள் 88000 07722 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


