முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் காலம் கடினமாக இருக்காது: இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : என்னை நம்புங்கள், வரும் காலம் கடினமாக இருக்காது, நி்ச்சயம் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும், மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 125 ஆண்டுவிழா நேற்று டெல்லியில் நடந்தது. இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தபின் நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். ஏற்கெனவே ஊரடங்கு நீக்கத்தில் முதல்கட்டத்தில் இருக்கிறோம், மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம்.  நான் இவ்வாறு நம்பிக்கையுடன் பேசுவது பலருக்கு வியப்பைத் தரலாம். நான் இந்திய மக்களின் அறிவுத்திறன், திறமை, புதிய கண்டுபிடிப்புகள், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில்முனைவோர், பணி்த்திறன் ஆகியவற்றின் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளேன். ஒருபுறம் நாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம், மற்றொருபுறம் பொருளாதாரத்தையும் திறந்து விட்டு இயல்புக்கு வர அனுமதித்துள்ளோம்.

தற்போது நாம் ஊரடங்கு தளர்த்தும் முதல்கட்டத்தில் இருக்கிறோம். ஆதலால், பொருளாதார வளர்ச்சியை இயல்பு பாதைக்கு கொண்டு வரும் முயற்சி ஏற்கெனவே தொடங்கி விட்டது. நம்முடைய நோக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முதலீட்டு கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவை இந்தியா தற்சார்பு பொருளாதாரமாக உருவாக அவசியம். என்னை நம்புங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இயல்புக்கு திரும்புதல் கடினமாக இருக்காது.

இந்த நேரத்தில்தான் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உத்வேத்துடன் செயல்பட வேண்டும். தொழில்துறை தலைவர்கள்தான் உள்நாட்டுக்கு உத்வேகம் கொடுப்பவர்கள். இந்தியாவில் பொருட்களை நாம் தயாரிப்பதும், உலகிற்கிற்காக தயாரித்து வழங்குவதும் அவசியம். காலச்சூழலுக்கு ஏற்றார்போல் பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது,

இந்த சீர்திருத்தங்கள் தொடர்ந்து இருக்கும். முதலீட்டுக்கும், தொழில் செய்வதற்கும் ஏதாவான சூழல் உருவாக்கும் வரை நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வோம். நாட்டின் பொருளாதார எந்திரம் செயல்படுவதற்கு குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் அவசியம். 

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் எனும் நம்பிக்கையை விவசாயிகள்,சிறு வணிகர்கள், தொழில்முனைவோர் ஆகியோரிடம் இருந்து பெறுகிறேன். நம்முடைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை கொரோனா குறைத்திருக்கிறது. ஆனால், இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து