எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் வரும் 8-ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 24-ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தது.
இதற்கிடையே, கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றி தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்னதாக, ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்ததால், அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும்( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020-க்குள் வந்து இருக்க வேண்டும்.
அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ளதால், தமிழகத்தில் வரும் 8-ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


