எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, டெல்லி- அமிர்தசரஸ் விரைவுவழிச் சாலையின் ஒரு பகுதியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு புதிய பசுமை வழிச் சாலை ஏற்படுத்தப்படும். சுல்தான்பூர் லோதி, கோயிந்த்வால் சாகிப், கடூர் சாகிப், கர்தார்பூர் சாகிப் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பசுமைவழி சாலை அமையவிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் சாலை முழுமையாக மேம்படுத்தப்படும் மற்றும் சிக்னல்கள் இல்லாத சாலையாக இது இருக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பசுமைவழிச் சாலை திட்டம் நிறைவடைந்த பிறகு அமிர்தசரஸில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்வதற்கான நேரம் பாதியாக குறைந்து விடும் என்றும், அதாவது பயண நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என்றும் இதன் மூலம் பஞ்சாப் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவு செய்யப்படுவதாக கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக முதலாவது கட்டமாக ரூ, 25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் அமிர்தசரஸ் நகரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


