Idhayam Matrimony

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதை தொடர்ந்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;-

முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க வழிகாட்டுதல்கள் குழு அமைபக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் விளைபொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்து கொள்ள இது வழிவகுக்கும்.

அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையை சியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள், துறைகளில் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து