எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கிண்டலடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தான் வெற்றி பாதாமி தொகுதிக்கு அவ்வப்போது சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் சித்தராமையா பாதாமிக்கு சென்ற போது அவருடைய காரை மலைவாழ் பெண்கள் வழிமறித்து தங்களுக்கு வீடுகள் இல்லை எனவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருவதாகவும், அதனால் தாங்கள் வசித்து வரும் பகுதியை தங்களுக்கே பட்டா செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் மனுவும் கொடுத்தனர். அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட சித்தராமையா, இதை என்னிடம் கேட்காமல் இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பொம்மனகட்டியிடம் கேட்கலாமே. மேலும் இத்தொகுதியில் தண்ணீர் பிரச்சினையும் உள்ளது. அதையும் அவரிடமே கேளுங்கள். என்னால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் முன்னாள் எம்.எல்.ஏ. பொம்மனகட்டியை கிண்டல் செய்யும் வகையில் மலைவாழ் பெண்களிடம், சிம்மனகட்டி வாழ்க என்று கூறுங்கள், எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் எனக்கூறி கிண்டலடித்தார்.
அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதனால் சித்தராமையாவிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் சித்தராமையா அவர்கள் கொடுத்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


