Idhayam Matrimony

தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. போதிய வென்டிலேட்டர்களும் உள்ளன. ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. அத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்ற கட்சியினரின் செல்வாக்கை பயன்படுத்தி மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்கலாம் என நினைப்பவர்களை விட மாட்டோம். சில மருத்துவமனைகள் பிளாக்கில் படுக்கைகளை ஒதுக்குவதால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்படுவதாக தகவல் வருகிறது. படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்குவதை தடுப்பதற்காக செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து