முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசு எந்தவிதமான தகவலும் அளிக்காததால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப்பயணம் செல்லப் பணம் செலுத்தி இருந்தனர். இதில் 1.25 லட்சம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும், 47 ஆயிரம் பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமும் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சவுதி அரேபிய அரசு கடந்த மார்ச் 12-ம் தேதியே ஹஜ் புனிதத் தலங்களை மூடிவிட்டது.

இதுவரை இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் தொடங்குவது குறித்து எந்த நாட்டுக்கும் சவுதி அரேபியா அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.  சவுதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயணம் நடக்காது என்று எண்ணி ஏற்கெனவே பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தாங்களாகவே முன்வந்து ஹஜ் புனிதப் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டன.

இந்த சூழலில் ரமலான் பண்டிகையையொட்டி நடக்கும் ஹஜ் புனிதப் பயணமும் நடக்கவில்லை. சவுதி அரேபிய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஏதுவான சூழல் இல்லாததால் பணத்தைத் திருப்பி வழங்குவதாக மகாராஷ்டிர ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. மேலும் இந்திய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி மசூத் அகமதுகான் நிருபர்களிடம் கூறுகையில், 2020-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் நடப்பதற்கு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே வாய்ப்புள்ளது.

அனைவருக்கும் முழுமையான தொகையை வழங்கக் கடிதம் எழுத இருக்கிறோம். மார்ச் 13-ம் தேதி தற்காலிகமாக ஹஜ் பயணத்தை ரத்து செய்வதாக சவுதி அரேபிய அரசிடம் இருந்து தகவல் வந்தது. ஆனால், அதன்பின் எந்தத் தகவலும் இல்லை. 2020-ம் ஆண்டு ஹஜ் பயணத்தைத் தொடங்க இன்னும் சில வாரங்களே இருப்பதால் இந்த ஆண்டு சாத்தியம் இல்லை எனத் தெரிகிறது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து