முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10, 12-ம் வகுப்புப் பொது தேர்வு முடிவுகள் ஜூலை 15-ல் வெளியாகும் : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாகும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடைபெறுவதாக இருந்தன. தேர்வுகள் நடைபெற்று வந்த சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தத் தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தன. எனினும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், சி.பி.எஸ்.இ. உரிய பதிலளிக்க உத்தரவிட்டது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் விளக்கமளித்த சி.பி.எஸ்.இ. வாரியம், ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. 

இந்நிலையில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

கோவிட்-19 காய்ச்சல் பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும்.  எனினும் தேர்வெழுதி மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் உகந்த சூழல் ஏற்படும் போது நடத்தப்பட உள்ள தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இவர்களுக்குத் தேர்வு முடிவுகளில் பெறும் மதிப்பெண்களே இறுதியானவை.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படாது. அவர்களுக்கு வாரியம் வழங்கும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வின் மூலம் மதிப்பெண்களைக் கூடுதலாக பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து