Idhayam Matrimony

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மான்டிகார்லோ : முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை தொடர்ந்து அவரது பயிற்சியாளர் இவானிசெவிச்சும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அட்ரியா டூர் என்ற பெயரில் நலநிதி டென்னிஸ் கண்காட்சி போட்டியை செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சமீபத்தில் நடத்தினார். இதில் பங்கேற்ற கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னோ கோரிச் (குரோஷியா), விக்டர் டிரோக்கி (செர்பியா) ஆகிய வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 

அத்துடன் இந்த போட்டியை முன்னின்று நடத்திய நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவி ஜெலினாவும் கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு ஆளானது உறுதியானது. போட்டியின் போது போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தான் கொரோனா தொற்று பரவ காரணம் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. நடந்த சம்பவத்துக்காக ஜோகோவிச் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜோகோவிச்சின் பயிற்சியாளரும், 2001-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 48 வயது முன்னாள் வீரர் கோரன் இவானிசெவிச் (குரோஷியா) புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவானிசெவிச், குரோஷியா சுற்று கண்காட்சி டென்னிஸ் போட்டியின் இயக்குனராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இவானிசெவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,

கடந்த 10 நாட்களில் எனக்கு நடத்தப்பட்ட 2 மருத்துவ பரிசோதனைகளில் நெகட்டிவ் (கொரோனா இல்லை) என்று முடிவு வந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பாராதவிதமாக பாசிட்டிவ் (கொரோனா தொற்று இருப்பதாக) என்று தெரியவந்துள்ளது. எனக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை.

எனது உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் தொடர்ந்து சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பேன். கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து