முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிமீயர் லீக் கால்பந்து: 30 ஆண்டுக்கு பின் சாம்பியன் பட்டம் பெற்றது லிவர்பூல் அணி

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரிமீயர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி பட்டம் வெல்வது 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

இங்கிலாந்தில் பிரபலமான கிளப் அணிகளுக்கான பிரிமீயர் லீக் கால்பந்து போட்டி கொரோனா அச்சத்தால் 3 மாதங்கள் பாதிக்கப்பட்டது. பிறகு ரசிகர்கள் இல்லாமல் சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்சியாவிடம் தோல்வி அடைந்தது. 

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணிக்கு, மான்செஸ்டர் சிட்டி தான் கொஞ்சம் நெருக்கடி கொடுத்தது. மான்செஸ்டர் அணியின் தற்போதைய தோல்வியின் மூலம் லிவர்பூல் அணி மகுடம் சூடுவது உறுதியாகி விட்டது. எஞ்சிய 7 லீக் ஆட்டங்களில் மான்செஸ்டர் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் லிவர்பூல் அணியின் புள்ளியை முந்த முடியாது. 31 ஆட்டங்களில் ஆடியுள்ள லிவர்பூல் அணி 28 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 86 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 63 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.

பிரிமீயர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி பட்டம் வெல்வது 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1989-90-ம் ஆண்டு சீசனில் கோப்பையை வென்றிருந்தது. மீண்டும் சாம்பியன் ஆகி விட்டதை நம்பவே முடியவில்லை. இது மிகப்பெரிய தருணம். மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறோம்.’ என்று லிவர்பூல் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜூர்ஜென் கிளோப் தெரிவித்தார். 

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருங்கள் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்திய போதிலும், அதை கண்டுகொள்ளாத ஆயிரக்கணக்கான ரசிகர்கள், லிவர்பூல் மைதானம் முன் கூடி மத்தாப்பூகளை கொளுத்தி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து