Idhayam Matrimony

சந்திரயான்-3: அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சந்திரயான்-3 விண்வெளிக் கலம் அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில், இஸ்ரோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரஷ்ய நிறுவனத்துக்கும், இஸ்ரோவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன், அதே நேரம் துரிதமாகவும் இதற்கான பணிகள் இஸ்ரோவில் நடந்து வருகின்றன. இதற்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார். 

அப்போது, இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்படாது என்றும் அதன் தயாரிப்புப் பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயால், ரஷ்யாவில் நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறுத்தப்பட வேண்டியிருந்தது, ஆயினும் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விஞ்ஞானக் குழுவின் கருத்துகளை ஏற்று பயிற்சித் திட்டத்திலும், காலக்கெடுவைத் தொடங்குவதிலும் வசதியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 2022-ம் ஆண்டில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவிற்கு முன்னர், இந்தப் பணி முடிவடையும் நோக்கில் விண்வெளி வீரர்களின் பயிற்சி இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் திட்டமிட்டபடி விண்கலம் செலுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) என்ற ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்பட்டு அதன் மூலம் தனியார் விண்வெளி வீரர்களுக்கு ஒரு நிலையான இடத்தை வழங்கவும், அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும் என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார். 

மேலும் சந்திரயான்-3 விண்வெளிக் கலம் குறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில், இன்றைய நிலவரப்படி அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒரு லேண்டர், ரோவர் மற்றும் ஒரு உந்துவிசை அமைப்புத் தொகுதிகளை நிலவுக்குக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும், முந்தைய சுற்றுப்பாதை முழுமையாகச் செயல்படுவதால் அதற்குப் புதிய சுற்றுப்பாதை இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து