Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை லடாக் செல்கிறார்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை 3-ம் தேதி லடாக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து இந்திய-சீன எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்தன. அதேசமயம் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பு ராணுவமும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளன. 

ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. 

இதற்கிடையே, லடாக் மோதல் தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனாலும், இந்திய-சீன எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை 3-ம் தேதி லடாக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் ராணுவ தளபதி முகுந்த நரவனேவும் செல்கிறார். லே பகுதிக்கு செல்லும் அவர்கள் அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து