Idhayam Matrimony

மேலும் 3,882 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிக்கை

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 94,049-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதார துறை கூறியுள்ளதாவது, 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 52,926 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2,852 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1264- ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,182 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 60,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 39,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இதுவரை 11,47,193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.53 சதவீதமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,521 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 3,882 பேருக்கு தொற்று உறுதியானது.  இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 57,844 ஆண்கள், 36,183 பெண்கள், 22 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து