எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிபராக உள்ள புடி 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் பங்கு பெற வகை செய்யும் அரசியலைமைப்பு திருத்தத்திற்கு அந்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் புடின் அடுத்த இரண்டு அதிபர் தேர்தல்களிலும் போட்டியிடலாம். அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷ்யாவின் அதிபராக புடின் செயல்படுவார்.
இந்நிலையில், தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தலில் புடின் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தேர்தலில் புடின் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ரஷ்ய அதிபர் புடின் நன்றி தெரிவித்தார். மேலும், இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இரு நாட்டு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


