எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தூத்துக்குடி : சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது விசாரணையை நேற்றும் தொடர்ந்தார். வழக்கறிஞர், செவிலியர், வேன் டிரைவர் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதேபோல் பெண் தலைமைக் காவலர் ரேவதி, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், காவலர் முத்துராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர், எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடியிலேயே முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சி.சி.டி.வி. பதிவுகள் போன்றவற்றை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நேற்று, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 19-ம் தேதி இரவு நடைபெற்ற சம்பவம் குறித்து தலைமை குற்றவியல் நடுவரிடம் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன் ஆகியோரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஓரிரு நாளில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நீதித்துறை நடுவர் விசாரணை:
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் ரேவதி உள்ளிட்ட போலீஸார், ஜெயராஜ் குடும்பத்தினரிடம் அவர் விசாரணை நடத்தியுள்ளார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ சான்று அளித்த அரசு மருத்துவர் வினிலா, காவல் நிலைய எழுத்தர் பியூலா, சிசிடிவி கேமிரா ஆபரேட்டரான காவலர் தாமஸ் பிரான்சிஸ், ஜீப் டிரைவர் ஜெயசேகர், காவலர் அழகு மாரிசெல்வம், காவல் நிலைய தூய்மை பணியாளர் வேல்முருகன் ஆகியோரிடம் கடந்த 2 நாட்களாக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்று திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, சாத்தான்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்தீசன், அரசு மருத்துவமனை செவிலியர் கிருபை, வேன் டிரைவர் நாகராஜன் உள்ளிட்டோரிடம் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


