Idhayam Matrimony

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வெப்பச்சலனம் காரணாமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

அடுத்த 4 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணாமாக தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்கள் மற்றும், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை, அரியலூர், கோவை, நீலகிரி, எரோடே, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியசும் நிலவக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரத்தில் 7 செ.மீ  மழையும், திருக்கழுக்குன்றத்தில் 6 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கேளம்பாக்கம், வந்தவாசி, மதுராந்தகம் பகுதிகளில் தலா 5 செ.மீ  மழையும், பெருங்கலூர், திருப்பத்தூர், சத்தியபாமா  பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை மற்றும் பெருந்துறை பகுதிகளில் தலா 4 செ.மீ   மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, கோவா கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 8-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து