முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு இடம்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுத்தாம்ப்டன் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 8-ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான 30 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து அணி அறிவித்திருந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஜோ ரூட் இல்லாததால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:- 

1. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ஜாஃப்ரா ஆர்சர், 5. டாம் பெஸ், 6. ரோரி பேர்ன்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. ஜாக் கிராவ்லி, 9. ஜோ டென்லி, 10. ஒல்லி போப், 11. டாம் சிப்லி, 12. கிறிஸ் வோக்ஸ், 13. மார்க் வுட்.

ரிசர்வ் வீரர்கள்:-

1. ஜேம்ஸ் பிரேசி, 2. சாம் கர்ரன், 3. பென் ஃபோக்ஸ், 4. டான் லாரன்ஸ், 5. ஜேக் லீச், 6. சாகிப் மெக்மூத், 7. கிரேக் ஓவர்ட்டன், 8. ஒல்லி ராபின்சன், 9. ஒல்லி ஸ்டோன்.

மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஜோ ரூட் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. பேர்ஸ்டோவ் மோசமான பார்ம் காரணமாக சேர்க்கப்படவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது உடல்நிலை மோசம் காரணமாக விலகிய ஜேக் லீச் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மொயீன் அலி டெஸ்ட் போட்டிக்கு தற்காலிகமாக விடைகொடுத்திருந்தார். தற்போது பயிற்சிக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து