Idhayam Matrimony

வாரனாசியில் இன்று தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

வாரனாசி : கொரோனா தொற்று காலத்தில் வாரணாசியில் உணவு விநியோகம் மற்றும் பிற உதவிகளை செய்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். 

கோவிட்-19 பெருந்தொற்றினால் அறிவிக்கப்பட்ட முடக்க நிலை காலத்தில், வாரணாசி பொதுமக்களும், அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் தமது சொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்ததன் வாயிலாகவும், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்தனர். 

இத்தகைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று  காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்களையும், செயல்பாடுகளையும் எடுத்துரைக்கிறார்.  முடக்க நிலையின் போது வாரணாசியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 2 லட்சம் ரேஷன் பொருள் பொட்டலங்களையும் மாவட்ட நிர்வாகத்தின் உணவு மையம் வாயிலாகவும், தமது சொந்த முயற்சிகளாலும் விநியோகித்தன. 

உணவு விநியோகம் தவிர, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் விநியோகிக்க இந்த நிறுவனங்கள் உதவின. இவர்களை மாவட்ட நிர்வாகம் கொரோனா போராளிகளாக கவுரவித்தது. கல்வி, சமூகம், சமயம், சுகாதாரம், உணவகங்கள், சமுதாய சங்கங்கள் மற்றும் பிற தொழில் திறன் துறைகளில் இந்த நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து