எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு சேதம் இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவதாகவும் ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பகால நோயறிதல்களுக்கு உதவுவதற்கும் நோயாளியின் குணப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் நரம்பியல் விளைவுகளின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


