பாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      சினிமா
Rekha 2020 07 12

Source: provided

மும்பை : மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரேகாவின் பங்களாவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

 

மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ரேகாவின் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்தனர். அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகை ரேகா மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட   பாதுகாவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து