Idhayam Matrimony

நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் கடந்த 1-ம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஜூலை 5-ம் தேதி மேலும் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 16 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 ஒப்பந்த ஊழியர்கள், 2 பேர் நிரந்தர ஊழியர்கள் ஆவார்கள்.   

இந்நிலையில், இந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நெய்வேலி என்.எல்.சி.-க்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து