எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : வலிமையான, எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட மற்றும் சுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் முக்கிய பங்கினை ஆற்ற முடியும்: பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
மும்பை வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் 184வது பொதுக்குழு கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
கோவிட்-19 நெருக்கடி, உலகையை மாற்றியுள்ள போதிலும் இந்திய மக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இந்த நெருக்கடிக்கு பலியாகி விடாமல் இந்தச் சூழலை எதிர்கொள்ள தொடர்ச்சியாக புதிது புதிதான வழிமுறைகளை உருவாக்கி நெருக்கடியையே வாய்ப்பாக மாற்றி எதிர்பாற்றல் என்ற பிரத்யேக குணாம்சத்துடன் காலூன்றி நிற்கின்றனர்.
இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றுவதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானது. மேலும் இவை ஐ.சி.யூ. படுக்கைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தனிமைப்படுத்தல் வசதிகள், முகக்கவசங்கள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு இந்தியாவில் கோவிட் நெருக்கடி சூழலை எதிர்த்துப் போராடி வருகின்றன.
கோவிட் நெருக்கடிக்கு முன்புள்ள உலகமும், கோவிட் நெருக்கடிக்கு பின்புள்ள உலகமும் வித்தியாசமானவையாக இருக்கின்றன. கோவிட் நெருக்கடிக்கு பின்பான உலகை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள நாம் முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஒரு நாடாக இந்தியாவானது நெருக்கடிக்குப் பிறகான காலகட்டத்தில் முதலீடு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் புத்தாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தியை அதிகரித்தல், உற்பத்திப் பொருட்களின் தரத்தை அதிகரித்தல், அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சி செய்தல், இடையூறு இல்லாத சரக்குப் பயணத்திற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல், போட்டியை எதிர்கொள்ளக் கூடிய வகையில் விலை, புத்தாக்க நடைமுறைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தக் கவனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வலிமையான மற்றும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதில் வர்த்தக அமைப்புகள் முக்கிய பங்கினை ஆற்ற முடியும் என்று கோயல் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


