Idhayam Matrimony

கொரோனா காலகட்டத்தில் இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புகைபிடிப்பதை விட்டுள்ளனர்

புதன்கிழமை, 15 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொரோனா காலகட்டத்தின் போது புகைபிடிப்பதை கைவிட்டுள்ளார்கள்.

லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு ஏப்ரலின் மத்தியிலிருந்து ஜூன் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வில் 11 லட்சம் பேர் இங்கிலாந்தில்  புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலைவில் இருக்கும் போது, மதுபான விடுதிகளுக்கு செல்லும்போது புகைபிடித்தவர்களும், வீட்டுக்கு தெரியாமல் புகை பிடித்தவர்களும் தற்போது கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள், குடும்பத்துடன் அடைந்திருக்க வேண்டிய சூழல் வந்ததால் புகைபிடிப்பதை விட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

என்றாலும், இன்னமும் புகைபிடிப்போரின் எண்ணிக்கையோ, இதைவிட ஐந்து மடங்கு அதிகம் என்ற கவலைக்குரிய செய்தியையும் அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து