முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் மிகப்பெரிய உளவு சாதனம் டிக்டாக்: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சொல்கிறார்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

டிக்டாக்கில், முகத்தை அடையாளம் காணும் வசதி உள்ளது. உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்டு, சீனாவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டருக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியுள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சீனாவால் தொடங்கப்பட்ட டிக்டாக், வீசாட் போன்ற செயலிகள் குறித்து டிரம்ப் நிர்வாகம் தீவிர கண்ணோட்டத்துடன் அணுகி வருகிறது. இந்தியா ஏற்கனவே இவற்றை தடை செய்துள்ளது. அது போல், அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தடை செய்து விட்டால், சீன கம்யூனிஸ்டு கட்சி தனது மிகப்பெரிய உளவு மற்றும் கண்காணிப்பு சாதனத்தை இழந்து விடும்.   டிக்டாக்கில், முகத்தை அடையாளம் காணும் வசதி உள்ளது. உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள், பெற்றோர், உறவினர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை திரட்டப்பட்டு, சீனாவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டருக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. பயோ மெட்ரிக் பதிவுகளையும் சீனா பெற்று விடும். எனவே, யாரிடம் பயோ மெட்ரிக் விவரங்களை கொடுக்கிறோம் என்பதில் உஷாராக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து