Idhayam Matrimony

கொரோனாவால் உயிரிழந்த ராஜபாளையம் மருத்துவர் சிகிச்சை குறித்து வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் சாந்திலால் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், கடந்த 5 தினங்களுக்கு முன்பு, தான் இறந்து விட வாய்ப்பு உள்ளதாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த ஆடியோ ராஜபாளையத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது.  மேலும், அந்த ஆடியோவில் 'ஹெலோ நான் சாந்திலால் பேசுகிறேன். அநேகமாக இன்று அல்லது நாளைக்குள் இறந்து விடுவேன். எல்லாருக்கும் போயிட்டு வர்றேன். ரொம்ப நன்றி என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் கொரோனாவுக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் எதுவும் சரியில்லை. எனக்கு மூச்சு வாங்குகிறது. ஆக்ஸிஜன் சிகிச்சை அரையும் குறையுமாக வைக்கிறார்கள். சிகிச்சை சரியில்லை. அவ்வளவுதான். என் கடைசி கட்டம் எனத் தெரிவித்த நிலையில் இந்த ஆடியோ பகிரப்பட்டது. 

இந்த நிலையில் , ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் மன உளைச்சல் காரணமாக அவர் இவ்வாறு பேசி ஆடியோ வெளியிட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து