Idhayam Matrimony

வரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக               பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய      பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை   ஏற்று,  ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக  பாசனத்திற்கு  1.8.2020   முதல்   28.11.2020 வரை 120   நாட்களுக்கு 8812.80 மி.கன அடி தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், ஈரோடு மாவட்டத்தில்  கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள  24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என்பதை  நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாய பெருமக்கள்  நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து