எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு தமிழக முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கன அடி ஆகும். மேலும், தடுப்பணையின் மேற்புறம் 1500 மீட்டர் மற்றும் கீழ்புறம் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகள் அமைக்கப்படவிருக்கின்றன.
இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயரும். இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் உயரும். இதனால் இப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1,602 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து, கொள்ளளவினை மேம்படுத்தி, நீர்தேக்கத்தை உருவாக்கிட 62 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூர் அருகில், பாலாற்றின் குறுக்கே 42 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், எலந்தம்பட்டு கிராமத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி,
கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில், உளுந்தூர்பேட்டை மற்றும் பண்ருட்டி வட்டங்களில், மலட்டாற்றினை தொலைகல் 24,000 மீட்டர் முதல் 40,000 மீட்டர் வரை 15 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி,
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருநகரி கிராமத்தில், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே தொலைகல் 21.200 கிலோ மீட்டரில், 30 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உப்பாற்றை சீரமைத்து, உப்பாற்றின் குறுக்கே, குறுக்கு கட்டுமான கட்டமைப்புகளை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன் வலசை கிராமம், சீனியப்பா தர்கா அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் திருவாடனை வட்டம், முள்ளிமுனை கிராமம் அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி,
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமம், புது அணைக்கட்டு வாய்க்காலினை 10 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி மற்றும் போடிநாயக்கனூர் வட்டம், போடிநாயக்கனூர் கிராமம், அணைப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ராஜவாய்க்கால் அணைக்கட்டை புனரமைத்தல் மற்றும் ராஜவாய்க்கால் அணைக்கட்டின் மேல்புறம் மற்றும் கீழ்புறத்தில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டும் பணி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டங்களில் மலட்டாறு வாய்க்காலினை 0 மீட்டர் முதல் 24000 மீட்டர் வரை 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி, திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் கிராமத்தில் 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களில் மைல் 1/2 முதல் 20/1 வரையிலான பாசன மதகுகள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், நத்தம் கிராமம், திருமணிமுத்தாற்றின் குறுக்கே, காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டினை 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யும் பணி, குஜிலியம்பாறை வட்டம், பாளையம் கிராமம், விராலிப்பட்டி கிராமத்திலுள்ள கசிவு நீர் குட்டையினை 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி கிராமம் புல எண். 487-ல் நங்காஞ்சியாற்றின் குறுக்கே ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மதயானைப்பட்டி கிராமம் அருகில் பேராம்பூர் வாரியின் குறுக்கே 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி,
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள உடுமலைக் கால்வாய் தொலைகல் 16.600 கி.மீ முதல் 23.170 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மானக் கால்வாய்களில் விடுபட்டுள்ள கால்வாயினை 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், திருக்கண்ணமங்கை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்களை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தி புனரமைக்கும் பணி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், எஸ்.அம்மாபட்டி மற்றும் வடுகபட்டி கிராமங்களில் (ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில்) அர்ஜுனா நதியின் குறுக்கே 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் அமைத்துள்ள பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயினை தொலைகல் 36.00 கி.மீ முதல் 39.50 கி.மீ வரை 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி என மொத்தம் 280 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
'தேசிங்குராஜா-2' திரைவிமர்சனம்
16 Jul 2025காவல் ஆணையராக இருக்கும் விமல், குற்றவாளிகளுக்கு துணை போவதோடு காவல்துறைக்கே களங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொல்லப்போவதாக சவால் விடுகிறார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன '3 BHK' படக்குழு
16 Jul 2025சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.