Idhayam Matrimony

மறு உத்தரவு வரும் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்தார். 

மார்ச் மாதம் விற்கப்பட்ட பி.எஸ்.-4 வாகனங்கள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில், வாகன விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த  ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பி.எஸ்-4  வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும்வரை பி.எஸ். -4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து  சுப்ரீ்ம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்தது.  பி.எஸ்.-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த பி.எஸ்.-4 ரக வாகனங்களை விட பி.எஸ்.-6 வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும்.

மேலும், பி.எஸ்.-6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதனால், பி.எஸ்.-5 என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக பி.எஸ்.-6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பி.எஸ்.-6 விலை அதிகம் என்றாலும் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக மக்கள்  பி.எஸ்.-6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து