Idhayam Matrimony

இதயக்கனி கலைக்குழு நடத்தி வரும் சாரங்கபாணி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இதயக்கனி கலைக்குழுவை நடத்தி வரும் சாரங்கபாணி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இதயக்கனி என்ற கலைக்குழுவை நடத்தி வரும் சாரங்கபாணி, உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால உடன்பிறப்பு சாரங்கபாணி, தனது கலைக்குழுவின் மூலம் கட்சியின் கொள்கைகளையும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார்.

அன்பு சகோதரர் சாரங்கபாணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து